என்னது பேப்பர் ரோஸ்ட் ஓரத்தில வரிசையா ஓட்டை இருக்குது?
இது கம்ப்யூட்டர் பேப்பர் ரோஸ்ட்...
***************
நகை போடாமல் இருப்பதே மேல்.
ஏன்?
நகை போட்டால் அது பீமேல்.
****************
என்னங்க நாலு போன் கால் பேசிட்டு ஒருகாலுக்கு காசு தர்றீங்க?
யோவ், நாலு கால் ஒன்னு தானேய்யா...
***************
ஒரு பையன் தலைக்கடியில் டிக்சனரி வச்சிக்கிட்டு தூங்குறானே, ஏன்?
ஏன்னா, அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்.
****************
உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே, உங்களுக்கு தெரியுமா?
எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க...
*****************
இந்தியாவுல இந்த ஆளு கால் படாத இடமே இல்லை.
அப்படியா..?
ஏன்னா, அவர் கீழே கிடந்த இந்தியா மேப்பை முழுசா மிதிச்சிட்டாரு...
*****************
என்னப்பா, இது நேத்து சாப்பிட்ட காபி மாதிரியே இருக்குது?
இது XEROX காபி அதான்...
*****************
திரும்ப திரும்ப என் வீட்டிலேயே திருடு போகுது சார்...
அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துடவேண்டியதுதானே...
*****************
Friday, February 27, 2009
Subscribe to:
Posts (Atom)